ராமநாதபுரம் : நகராட்சி கூட்டம்
நகராட்சி கூட்டத்தில் ஆறு மாதமாக ஆணையாளர் இல்லை, நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நகராட்சியில் ஆணையாளர் இல்லாததால் பணிகள் நடைபெறாமல் இருப்பதாக நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.
சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இன்று பரமக்குடி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் ஆணையாளர் பொறுப்பு அஜிதா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகரமன்ற தலைவர் சேதுகருணாநிதி, துணைத் தலைவர் குணா மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது பரமக்குடி நகராட்சியில் கடந்த ஆறு மாதமாக ஆணையாளர்,
பொறியாளர் பதவிகள் காலியாக உள்ளது. ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் கூடுதல் பொறுப்பாக பரமக்குடி நகராட்சியை கவனித்து வருகிறார். இதனால் சொத்து வரி, வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் உள்ளிட்டவை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே காலியாக உள்ள ஆணையாளர், பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என நகர்மன்ற கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பரமக்குடி நகராட்சி முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.