ராமநாதபுரம் சாலை விபத்து - காற்றினால் போக்குவரத்து பாதிப்பு

ராமேஸ்வரத்தில் கார் பார்க்கிங் அருகே வீட்டின் மேற்கூரை பலத்த காற்று காரணமாக உடைந்து சாலையில் சென்ற மின்கமின் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஒருவர் பலத்த காயத்துடன் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதி போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

Update: 2024-04-12 15:37 GMT

சாலை விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில் திடீரென ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் பலத்த காற்று வீசத் துவங்கியது சுற்றுலாப் பயணிகள் கார் வாகனங்களை நிறுத்தக்கூடிய கார் பார்க்கிங் அருகே ஒரு வீட்டின் பெரிய அளவிலான இரும்பால் போடப்பட்ட மேற்கூரை உடைந்து வீட்டில் இருந்து பத்து மீட்டர் தொலைவில் தாண்டி ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் உயர் மின் கம்பி மீது விழுந்ததில் பலத்த சத்தத்துடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அது சமயம் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண் மீது மேற்கூரை விழுந்ததில் அந்தப் பெண் பலத்த காயத்துடன் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் மேலும் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து தற்போது அப்பகுதியில் வேலை பணியை துவங்கி உள்ளனர் மேலும் மேற்கூறையானது சுற்றுலா வந்த வாகனத்தின் மீதும் மோதி நிற்கும் காரணத்தால் தற்போது அவற்றை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் மின்வாரியத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மேற்கூறையை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட துவங்கியுள்ளனர்.
Tags:    

Similar News