ராமநாதபுரம் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் தொடங்கியது சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-19 10:27 GMT

பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 

தமிழகம் முழுவதும் 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

2008 மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ஆண்டு தோறும் சாகர் கவாச் ஆபரேஷன் ஆம்லா உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6மணிக்கு தொடங்கிய சாகர்கவாச் ஒத்திகைப் பயிற்சி நாளை மாலை 6மணி வரை நடைபெற உள்ளது.

ஒத்திகையின் போது வேடமிட்டு தீவிரவாதிகள் போல் படகுகள் உள்ளிட்டவற்றில் ஊடுருவும் கடற்படை கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்தவர்களை மரைன்போலீசார் கண்டுபிடித்துப் பிடிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தேவிபட்டிணம், வாலிநோக்கம், பாம்பன் உள்ளிட்ட கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில் தீவிரவாதிகள் போல் ஊடுருவியவர்களை பிடிக்க தொடர்ந்து மரைன் போலீசார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

தற்போது வரை தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊடுருவிய 6 கடற்படை வீரர்களை டம்மி வெடிகுண்டுகளுடன் மரைன் போலீசார் பிடித்து ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இன்னும் சிலர் இவர்களைப் போல் கடலுக்குள் பதுங்கி இருப்பதாக உள்ளது அடிப்படையில் தொடர்ந்து தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரன் கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News