ராமநாதபுரம் இலங்கை கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ராமநாதபுரம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, ஏராளமான இலங்கை பக்தர்கள் பங்கேற்பு .

Update: 2024-02-25 14:04 GMT
வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் 2024 ஆம் ஆண்டு திருவிழா உற்சவம் இன்று மாலை சுமார் 5:30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்திர பெருவிழாவின் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இத்திருவிழாவில் வரக்கூடிய பக்தர்களின் நலன் கருதி பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரம் குடிநீர் வசதி தற்காலிகமாக தங்குமிடம் சாலைகள் துறைமுகங்கள் மற்றும் மின்சார வினியோகம் உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவ குழுக்கள் இலங்கை கடற்படை அமைத்துள்ளது. மேலும் இலங்கை இந்திய இருநாட்டு உறவை பலப்படுத்தி இருநாட்டு அரசுகள் மற்றும் மக்களை இணைக்கும் ஓர் அங்கமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா காணப்படுகிறது. இந்தாண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சினை காரணமாக இந்திய தரப்பிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்ளாததால் இலங்கையில் இருந்து வரக்கூடிய தமிழர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து சிலுவைப்பாதை நடைபெறும்.அதனைத் தொடர்ந்து நாளை காலை சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு கச்சத்தீவு திருவிழாவில் இருந்து மீண்டும் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள்.
Tags:    

Similar News