ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு.

Update: 2024-02-28 06:38 GMT

 கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதினால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு மீன்பிடி அனுமதிச்சீட்டும் ரத்து செய்துள்ளனர். மேலும் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News