ராங்கியம் ஜல்லிக்கட்டு - 6 பேர் காயம்!
திருமயம் அருகே ராங்கியத்தில் அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 6 பேர் காயமடைந்தனர்.;
Update: 2024-05-20 06:01 GMT
ஜல்லிக்கட்டு
திருமயம் ஒன்றியம் ராங் கியத்தில் அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில், ஆர் டிஓ ஐஸ்வர்யா தொடங்கி வைத்தார். இதில்சிவகங்கை, புதுக்கோட்டை மாவட் டங்களை சேர்ந்த 280 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 60 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி• போட்டிப்போட்டு காளைகளை அடக்கி மகிழ்ந்தனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பொன்னமராவதி டிஎஸ்பி (பொ) செல்வம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.