ராணிப்பேட்டை: புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புகையிலை பொருள்கள் விற்ற நபர்கள் மீது போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Update: 2024-05-11 03:57 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நேற்று கடைகளில் கடைகளில் பதுக்கிவைத்து விற்கப்படும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக அரக்கோணம் பகுதியை சேர்ந்த பாபு (37), நெமிலியை சேர்ந்த மகேந்திரன் (31), வாலாஜா தாலுகாவை சேர்ந்த சதீஷ் (34) உள்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட 172 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.