மக்களுடன் முதல்வர் திட்டம் : ஆட்சியர் ஆலோசனை

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-06-30 14:34 GMT

மக்களுடன் முதல்வர் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, மாவட்ட வருவாய் அலுவலர் நரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி பேசுகையில்,"பொதுமக்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று 15 முக்கிய துறைகளை ஒன்றிணைத்து பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதே மக்களிடம் முதல்வர் திட்டத்தின் நோக்கம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஆகவே முகாம் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சரியான வகையில் மேற்கொண்டு இந்த திட்டத்தினை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும்,"என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News