ராணிப்பேட்டை: ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தேரோட்டம்!
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது.
Update: 2024-05-23 06:04 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் 2ம் ஆண்டு வைகாசி விசாக பிரமோற்சவ விழா கடந்த 14-ந் தேதி மயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம், மகா தீபாரதனையும், காலை,மாலையில் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. 9-வது நாளான யாகசாலை பூஜை,வசந்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருனடிமை சுவாமி முன்னிலையில் தேர்பு றப்பாடு நடந்தது. தேரை திருவண்ணாமலை தவ ளகீர்த்தி சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய பகுதிகளுக்கு சென்று, கோவிலை சுற்றி மலை அடிவாரத்திற்கு வந்து நிலைநிறுத்தப்பட்டது. இந்த விழாவில் ஜி.கே. உலகப் பள்ளி இயக்கு னர் சந்தோஷ் காந்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன், தொழிலதிபர் ஏ.வி.சாரதி, செயல் அலுவலர் சங்கர், ஆற்காடு அண்ணாமலையார் அறக்கட்டளை தலைவர் சரவணன், ஆற்காடு கண்ணன் ஸ்வீட் லேண்ட் உரிமையாளர் கே.பாஸ்கரன், தொழிலதிபர் நல்லசாமி, ராணிப்பேட்டை விமல் நந்தகுமார், ஆற்காடு வினோத் உள்பட திரளான பக்தர் கள் மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.