பலாத்கார வழக்கு: போலீசாரால் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் சரண்
சேலத்தில் மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு தொடர்பாக, போலீசாரால் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் சரண் அடைந்தார்.;
Update: 2024-02-24 05:20 GMT
சேலத்தில் மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு தொடர்பாக, போலீசாரால் தேடப்பட்ட தொழிலாளி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சேலம் அருகே காரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நேரு (வயது 50), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் நேரு மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று நேரு சேலம் கூடுதல் விரைவு மகளிர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.