அரிய வகை ஆந்தை மீட்பு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அரியவகை ஆந்தை வெயில் பாதிப்பால் உயிருக்கு போராடிகொண்டிருந்த நிலையில் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.;
Update: 2024-05-03 02:08 GMT
அரியவகை ஆந்தை மீட்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலமுருகன் என்பவரது புகைப்பட கடை முன்பு அரியவகை ஆந்தை ஒன்று கடும் வெயில் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பாலமுருகன் பறவையை பத்திரமாக மீட்டு மன்னார்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பறவையை பத்திரமாக மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றனர்.