இராசிபுரம் : அம்மா உணவக மேற்கூரை இடிந்து விழுந்தால் பரபரப்பு
இராசிபுரத்தில் பெய்த கனமழையால் அம்மா உணவக மேற்கூரை இடிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.;
Update: 2024-05-21 14:07 GMT
சேதமடைந்த பால் சீலிங்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தின் (பால் சீலிங் )எனப்படும் மேற்க் கூரை நேற்று இரவு பெய்த கனமழையால் முழுதும் இடிந்து விழுந்தது.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்துக்கும் மேற்பட்ட மின்விசிறிகள் முழுதும் சேதமடைந்த நிலையில் இங்கு உணவருந்த மக்கள் அச்சத்துடன் உணவருந்தி வருவதால் ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் இதை உடனடியாக அப்புறப்படுத்தி முறையாக பராமரிக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடியற்காலைப் பொழுதில் இது உடைந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.