சந்தன வெள்ளி காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன்

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சந்தன வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2024-06-15 01:23 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களிலும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சாமிக்கு சந்தனம் வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tags:    

Similar News