ராசிபுரம் : ஆட்சியர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழியேற்பு

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா தலைமையில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 க்கான வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-03-20 05:32 GMT

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம் ,இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாடிற்க்கு ஆட்ப்படாமல் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் வாக்களிப்போம் என பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற பதாகைள் வைக்கப்பட்டு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற துண்டறிக்கை வழங்கப்பட்டது.

மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறி பேசினார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்காளர் உறுதிமொழி ஏற்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் தங்களது தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வையும் கையெழுத்திடுமாறு அவர் தொடங்கி வைத்து கேட்டுக் கொண்டார்.

முதல் தலைமுறை வாக்காளர்களுடன் குழு புகைப்படம் செல்பியும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News