திருப்பூர் மாவட்டம் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது!

தாராபுரம்-அலங்கியம் ரோடு வழியாக ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-02 13:43 GMT

தாராபுரம்-அலங்கியம் ரோடு வழியாக ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் உத்தரவு படி, எஸ்.பி.சந்திரசேகரன், டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் தாராபுரம்-அலங்கியம் ரோடு வழியாக ரேசன் அரிசி கடத்தி வருவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் துளசிமணி வழிகாட்டுதலில்  எஸ்.ஐ, பொன்குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று  சீத்தக்காடு பாலம் அருகில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த ரோட்டில் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால்  இலவசமாக வழங்கக்கூடிய 1025 கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பைக் ஓட்டிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர்  தாராபுரம் உடுமலைரோடு, மாருதிநகர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (49) என்பதும் சுற்றுவட்டார  பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசிகளை வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை  செய்ய கடத்தி வந்தது  தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1025 கிலோ ரேசன் அரிசி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதே போல் எஸ்.ஐ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தாராபுரம்-பூலவாரி ரோட்டிலுள்ள காலி இடத்தில் சோதனை செய்தனர்.  அங்கு அரசால் இலவசமாக வழங்கக்கூடிய 1050 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு அரிசி பதுக்கி வைத்திருந்த சதாசிவம் (45) என்பவரை கைது செய்து. அவரிடம் இருந்த 1050 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News