ராமநாதபுரம்: ரேஷன் அரிசி கடத்தல்

பரமக்குடியில் பட்டப்பகலில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தும் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2024-06-18 15:17 GMT

ரேஷன் அரிசி கடத்தல்

. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் 190 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. பரமக்குடி அருகே நயினார்கோவில் சமத்துவபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து இன்று மதியம் லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசியை கடத்துகின்றனர்.

இதனை அங்கிருந்து ஒருவர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்டோர் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ரேஷன் கடையில் இருந்து லாரியில் அரிசி மூடைகளை கடத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Tags:    

Similar News