சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்ய பரிந்துரை

சிவகாசியில் விதிகள் மீறி இயங்கிய பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

Update: 2024-05-17 15:07 GMT
சிவகாசியில் விதிகள் மீறி இயங்கிய பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்ய பரிந்துரை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரியில் விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.சிவகாசியை சேர்ந்தவர் முனியராஜ்,இவருக்கு மாரனேரியில் டி.ஆர்.ஓ.,உரிமம் பெற்ற ஸ்ரீபதி பட்டாசு ஆலை உள்ளது.

இங்கு சிவகாசி தாசில்தார் வடிவேல், தீப்பெட்டி தொழிலாளர் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பட்டாசு ஆலையில் விதி மீறலாக மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தரையில் காய வைக்கப்பட்டிருந்தது.

மேலும் பட்டாசு இருப்பு அறையில் 15 பணியாளர்களை வைத்து சோர்சா மற்றும் குருவி வெடி தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.

Tags:    

Similar News