கோவிலுக்கு சொந்தமான ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம், ஆறாம்பண்ணை சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. ;
Update: 2024-03-24 04:18 GMT
கோயில் நிலம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடம் 5 ஏக்கர் உள்ளது. இந்த இடத்தினை தனியார் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இந்த இடத்தினை மீட்க அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோயில் தக்கார் கோவல மணிகண்டன், ஆலய நிலங்களின் தனி வட்டாட்சியர் நம்பிராயர், நில அளவர்கள் ஜெகன் ராஜா, முத்துசெல்வம், ஆனந்தக்குமார் ஆகியோர் கோயிலுக்கு சென்று நில அளவை செய்து அந்த இடத்தினை மீட்டெடுத்தனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.8 லட்சமாகும். இந்த பணியில் திருக்கோயில் அலுவலர்கள் இசக்கி பாண்டியன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.