ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு, விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இராணுவத்திற்கு ஆட்கள்தேர்வு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-28 02:41 GMT

மாவட்ட ஆட்சியர்

உத்தரப் பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் (JAT Regtiment Center) விடுத்துள்ள அறிவிப்பில் வருகின்ற 01.07.2024 முதல் 08.07.2024 வரை அக்னிவீர் திட்டத்தில் இராணுவத்திற்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆட்தேர்வில் Tradesman, clerk போன்ற பணிகளுக்கு ஆட்தேர்வு நடைபெறுகின்றன என்றும் இதில் முன்னாள் படைவீரர்களின் மகன் / மகள், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள், படைபணியின்போது உயிர்நீத்தவர்களின் வாரிசுகள், முன்னாள் படைவீரர்களின் வளர்ப்பு மகன்கள், திருமணமாகாத சகோதரர்கள், (JAT Regtiment Center) ல் பணிபுரித்து வரும் படைவீரர்களின் சார்ந்தோர்கள் மற்றும் இப்படைபிரிவில் பணிபுரித்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் இதனை தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் முன்னாள் படைவீரர்களின் சீறார்கள் கலந்துகொண்டு பயனடைந்திடுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் .கி.சாந்தி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News