தேர்தல் தள்ளுபடியாக சிலிண்டர் விலை குறைப்பு !

தேர்தல் தள்ளுபடியாக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் குற்றச்சாட்டு

Update: 2024-04-09 05:35 GMT

பெரியகருப்பன் 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஒலுகமங்கலம் கிராமத்தில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது வாக்காளரிடத்தில் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டரை நான் ஆட்சிக்கு வந்தால் 250 ரூபாய்க்கு தருவேன் என்றார் மோடி. ஆனால் 1200 ரூபாய்க்கு விலை உயர்ந்தது. இப்போ ஆடித்தள்ளுபடி போல் தேர்தல் தள்ளுபடியாக 100 ரூபாய் குறைத்துள்ளார்.

பத்தாண்டு காலமாக 800 ரூபாய் உயர்த்திவிட்டு தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற நூறு ரூபாய் குறைத்த மோடிக்கு பாடம் புகட்டுவதற்கு நீங்கள் கைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி இந்தியாவில் மலரப்போகிறது. 1200 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கு சிலிண்டரையும், 100 நாள் வேலை திட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 400 ரூபாயும் தர இருக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற பல்வேறு சலுகைகளை தருகின்ற நம் முதலமைச்சரின் கரத்தை பலப்படுத்த மூன்றாண்டு ஆட்சி காலத்திற்கு நீங்கள் வழங்குகின்ற நற்சான்றாக கைச்சினத்திற்கு வாக்களியுங்கள் என பேசினார்

Tags:    

Similar News