கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்யுங்கள்: அதிகாரி

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்ய ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-06-12 11:13 GMT

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்ய ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை செங் கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24-ம் அரவைப் பருவத்தில் 2,88,443 டன் கரும்பு அரவை செய்துள்ளோம். இதர கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு 54,500 டன் பரிமாற்றம் செய்யப்பட்டு சராசரி சர்க்கரை கட்டுமானமாக 8.84 பெறப்பட்டுள்ளது. மேலும் அரவைப்பருவத்தில் கரும்பு அறுவடை பணிக்கு 9 அறுவடை எந்திரங்கள் ஈடுபடுத்த பட்டதால் வெட்டுக்கூலி வெகுவாக குறைக்கப்பட்டு கரும்பு விவசாயிகள் பலர் பயன் அடைந்துள்ளனர்.

எனவே கரும்பு நடவு செய்ய உள்ள விவசாயிகள் அனைவரும் 4.50 அடிக்கு குறையாமல் பார் அமைத்து நடவு செய்திடுங்கள்.தற்போது கரும்பில் "பொக்கா போங்" எனும் பூஞ்சை நோய் பரவலாக தென்படுகிறது. இதனை கண்காணித்து கட்டுப்பாட்டு நடவ டிக்கையை மேற்கொள்ள வேண்டும். இடைக்கணுப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளை தோகை உரித்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும் 2024-25-ம் அரவைப் பருவத்திற்கு போதிய கரும்பு இல்லாத நிலையில் ஒரு சில விவசாயிகள் ஆலைக்கு பதிவு செய்யாமல்வைத்துள்ளனர்.எனவே இந்தமாதம் (ஜூன்) இறுதிக்குள் பதிவு செய்து ஆலைக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News