குமாரபாளையம் அரசு கல்லூரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி துவக்கப்பட்டது.

Update: 2024-05-10 10:37 GMT

பணி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான உதவி மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை கல்லூரி முதல்வர் ரேணுகா துவக்கி வைத்தார். 

 இது குறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா கூறியதாவது: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான உதவி மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர் இணைய வழியில் விண்ணப்பிக்க சேர்க்கை உதவி மையம் கல்லூரியில் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை செயல்படுகிறது. பி.ஏ, தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் விபரம்: மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 11ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, (கைபேசி எண் இணைக்கப்பட்டது), கைபேசி எண், ஈ.எம்.ஐ.எஸ். நம்பர்,

விண்ணப்ப கட்டணம் 48:00 ரூபாய். பதிவு கட்டணம், 02:00 ரூபாய்.( எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை).விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 மே 2024. இணைய முகவரி : WWW.tngasa.in, கல்லூரி கோடு எண்: 1031013. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News