குடிநீர் தட்டுப்பாடை போக்க 100 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க பெருஞ்சாணி அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.

Update: 2024-03-26 09:19 GMT

 பெருஞ்சாணி அணை

குமரிமாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. கும்பப்பூ சாகுபடிக்கு பிறகு பிப்ரவரி கடைசியில் கடை அணை மூடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அறுவடை பணி தாமதமானதால் கூடுதலாக 2 வாரம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயி கள் அரசிடம் கோரிக்கை வைத்ததை யடுத்து பிப்ரவரி 15-ந்தேதி வரை அணையிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 15- ந்தேதி அணை மூடப்பட்டது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க பெருஞ்சாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து இன்று 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News