இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு.

Update: 2024-03-26 02:44 GMT

கம்யூனிஸ்ட் கட்சியினர் விடுதலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு. கடந்த 04.04.2018 அன்று கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் செய்யதவர்களை கும்பகோணம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் காவல் சட்டம் அமலில் இருந்தபோது சட்ட விரோதமாக ஒன்றுகூடி ரயில் மறியல் செய்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 23.12.2019 முதல் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (25.04.2024) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, நிர்வாகிகள் ஆர்.மதியழகன், ஏஜடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட பொருளாளர் ஏ.ராஜேந்திரன் மற்றும் பி.ராமையன் ஆகியோர் ஆஜராயினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் என்.செந்தில்ராஜன், பி.எடிசன்சுரேஷ், பி.இளையராஜா, டி.செந்தில்குமார், பி.லெவிமாமாதரசி உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர். வழக்கினை இன்று (25.04.2024) விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News