தஞ்சையில் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.5.46 லட்சம் விடுவிப்பு

தஞ்சையில் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.5.46 லட்சம் விடுவிக்கப்பட்டது.

Update: 2024-04-05 12:51 GMT

மாவட்ட ஆட்சியர் 

தஞ்சாவூரில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, வியாழனன்று விடுவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை கனரக வாகனங்களைப் பறக்கும் படையினர் சோதனை தேர்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக  ரூ.89 ஆயிரம், ரூ.63 ஆயிரத்து 800, ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 800, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்  என மொத்தம் ரூ.5 லட்சத்து 46 ஆயிரத்து 600  ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். இ

தைத்தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாக விடுவிக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல்முறையீட்டுக் குழுவில் உரிய ஆவணங்களை அளித்து விடுவித்துக் கொள்ள ஏதுவாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மாவட்ட அளவில் நாள்தோறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News