மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 நபர்களுக்கு நிவாரண உதவிகள்

தூத்துக்குடியில் இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு கிளை மற்றும் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பிரையன்ட் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்

Update: 2023-12-31 09:41 GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 நபர்களுக்கு நிவாரண உதவிகள்

தூத்துக்குடி மாநகரில் பெய்த மழை வெள்ளம் காரணமாக ஏராளமான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தங்களை வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக தொழில் அதிபர் சரவணப் பெருமாள் அவர்கள் முயற்சியின் அடிப்படையில் இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு கிளை சார்பில் மற்றும் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிவாரணத்தில் மருந்து பொருட்கள் பிஸ்கட் மளிகை பொருட்கள் பிஸ்கட் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் சரவணப் பெருமாள் , இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் இளங்கோ, செயலாளர் டாக்டர் மாரிமுத்து ,தேசிய தலைவர்கள் டாக்டர் மருது பாண்டியன், டாக்டர் பாலமுருகன் , டாக்டர் மீனாட்சி சுந்தரம், டாக்டர் ராமலிங்கம் ,இந்திய மருத்துவக் கழக தலைவர் டாக்டர் மாரிமுத்து ,மூத்த உறுப்பினர் டாக்டர் கே எஸ் ராமலிங்கம் மற்றும் பிரையன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்ராஜ் வியாபாரிகள் சங்க செயலாளர் ஞான செல்வம் சமூக ஆர்வலர் இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News