தூத்துக்குடியில் கட்டளை மையம் மூலம் நிவாரண பணிகள்
தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் வேன் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள், ஸ்மாா்ட் தெருவிளக்குகள், பொது முகவரி அமைப்புகள், அவசர அழைப்பு பெட்டி ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மையத்தின் மூலம் வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலுள்ள மொபைல் வேன் பயன்படுத்தப்பட்டது.
இதன் மூலம் 35க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 நபர்களுக்கு தண்ணீர் பாடல்கள், பிரெட் பாக்கெட்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ள காலத்தில் ஆளில்லா விமானங்கள் முக்கிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. மனிதன் நுழைய முடியாத பகுதிகளில் டிரோன் பயன்படுத்தப்பட்டது. ப்ரூட்டெக் சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.