பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகையை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.;

Update: 2024-06-19 03:43 GMT

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகையை வழங்கினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கடந்த மே 9 ஆம் தேதி நடந்த பட்டாசுஆலை வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர்.

Advertisement

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சமும், இறுதி சடங்கிற்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன.தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அப்போது அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் அரசு அறிவித்த நிவாரணத்தொகையை உயிரிழந்த 10 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags:    

Similar News