குடியை நிறுத்த பரிகாரம் : பணம், நகைகள் அபேஸ்
விராலிமலை அருகே குடியை நிறுத்த பரிகாரம் செய்வதாக கூறி நகை மற்றும் பணத்தை அபகரித்து சென்ற மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விராலிமலை தாலுக்கா ஆம்பூர் பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் வயது 38 கூலித்தொழிலாளி இவரது மனைவி விஜயா. நேற்று மதியம் விஜயா அவரது நாத்தனார் செல்வி ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர் அப்போது பைக்கில் வந்த ஒருவர் தன்னிடம் கை, கால் வலியை போக்கவும் மதுப்பழக்கத்தை நிறுத்தவும் மூலிகை படி உள்ளதாகவும் தோஷம் நீங்க பரிகாரம் செய்வதாகவும் கூறினார்.
இதை நம்பி அந்த நபரை வீட்டுக்குள் அழைத்த விஜயா தனது கணவர் தினமும் மது அருந்திவிட்டு வருவதால் அதை நிறுத்த பரிகாரம் செய்யும் வரை கேட்டார் அதற்கு அந்த நபர் ஐந்தாயிரம் செலவாகும் என்று கூறினார் விஜயாவோ தன்னிடம் 3500 மட்டுமே இருப்பதாக தெரிவித்தார் பின்னர் வீட்டில் முகப்பு அறையில் அமர்ந்து மருமநகர் பரிகாரம் செய்வதாக சில பொருட்களை கேட்டார் விஜயா அவரது நாத்தனார் செல்வி இருவரும் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தனர் மேலும் பொருட்கள் தேவைப்படுவதாக கூறி செல்வியை கடைக்கு அனுப்பி விட்டு விஜயாவை மட்டும் தரையில் அமர வைத்து பரிகாரம் செய்து விபூதி வழங்கினார் .
பரிகாரம் செய்வதற்கு கழுத்தில் அணிந்திருந்த தாலி மணி தோடு மூக்குத்தி மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகளை கழற்றித் தருமாறு கேட்டார். அதை நம்பி விஜயாவும் கழற்றிக் கொடுத்தார் பரிகாரம் செய்தவுடன் மறுப நம்பர் விஜயாவின் முகத்தில் விபூதி போன்ற பவுடர் தூவியதும் அவர் மயங்கினார் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் பணம் மற்றும் நகைகளுடன் தலைமறைவானார். கடைக்கு சென்று திரும்பிய செல்வி வீட்டுக்குள் விஜயா சுயநினைவின்றி பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் தான் வந்தவர் ஏமாற்று பேர்வழி என்பது தெரியவந்தது இது தொடர்பாக விஜயா அளித்த புகாரின் பெயரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது