பாஜக சர்ச்சை பேனர் அகற்றம்

வந்தவாசியில் பாஜக சார்பில் வைக்கப்பட்ட சர்சைக்குரிய பேனருக்கு விசிக மற்றும் இந்திய குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேனர் அகற்றப்பட்ட்டது.

Update: 2024-02-05 03:55 GMT

அகற்றப்பட்ட பேனர் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பாஜக சார்பில் கலியுக அம்பேத்கரே வருக வருக என பேருந்து நிலையம் அருகே பேனர் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக மற்றும் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மற்றும் விசிக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி ராஜு பேச்சுவார்த்தை நடத்தி சர்ச்சையான பேனரை அகற்றினர் இதனைத் தொடர்ந்து அனைவரும் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்
Tags:    

Similar News