செய்யாறு மார்க்கெட் அருகே நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்பு அகற்றம்
உணவு கடைக்கு ஆதரவாக வந்த இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
Update: 2024-03-08 10:08 GMT
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மார்க்கெட் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது உணவு விற்பனை செய்யும் கடையினர் நெடுஞ்சாலை துறை கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து உள்ளதை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் அகற்ற முற்பட்ட போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். உணவு கடைக்கு ஆதரவாக வந்த இந்து முன்னணியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்த செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தாங்களாகவே ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.