நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நகராட்சி நடவடிக்கை
கூடுவாஞ்சேரி ஜி. எஸ். டி. , சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
Update: 2024-02-12 04:08 GMT
கூடுவாஞ்சேரி ஜி. எஸ். டி. , சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்தும், நந்திவரம் அரசு மருத்துவமனை அருகில் மருத்துவமனை வளாகத்தை ஆக்கிரமித்தும், எண்ணற்ற கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளை அகற்ற வேண்டி, நகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்தும், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தன. சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதோடு, வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள குடைகள் அமைத்தும், பொதுமக்களுக்கும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியிருந்தனர். இது குறித்தான மக்களின் புகாரை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் தாமோதரன் உத்தரவுப்படி, போக்குவரத்து போலீசார் உதவியுடன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில், நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.