கீழவைப்பாரில் மணல் திட்டு அகற்றும் பணி : நடவடிக்கை!
கீழவைப்பாரில் மணல் திட்டு அகற்றும் பணியை கனிமொழி எம்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-17 10:55 GMT

மணல் திட்டு அகற்றும் பணி
தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் கடற்கரையிலுள்ள மணல் திட்டை அகற்ற கனிமொழி எம்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக கனிமொழி எம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் என்னைத் தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நேற்று கீழவைப்பார் பகுதி மக்களைச் சந்திக்கையில், அவ்வூரின் கடற்கரையிலுள்ள மணல் திட்டை அகற்றித்தரக் கோரிக்கை வைத்தனர். இன்று நம் ஏற்பாட்டில் அப்பகுதியில் இயந்திரங்கள் மூலம் மணல் திட்டை அகற்றும் பணிகள் நடைபெற்றன" என்று தெரிவித்துள்ளார்.