மீன் பிடிதுறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2024-06-20 06:00 GMT

மீனவர் பலி

தூத்துக்குடி லய‌ன்ஸ் டவுன் பகுதியில் வசிப்பவர் பொன்சால் இவருக்கு சொந்தமான விசைப்படகில் தூத்துக்குடி பாத்திமா நகர் 1வது தெருவில் வசிக்கும் அந்தோணிசாமி மகன் சுதாகர் (45) என்பவர் நேற்று காலை 8 மீனவர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார். இரவு 10 மணிக்கு மீன் பிடித்து விட்டு தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திற்கு விசைப் படகில் வந்தனர். விசைப் படகை கயிறு மூலம் கட்டிவிட்டு படகில் இருந்து சுதாகர் இறங்கும் போது திடீரென கால் தவறி கடலில் கரையோரத்தில் விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள் அவரை மீட்டனர். இது குறித்து தூத்துக்குடி மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மீனவர்கள் வேலைநிறுத்தம் கடலில் மூழ்கி இறந்த மீனவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப் படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளது.
Tags:    

Similar News