வாடகை பாக்கி - களத்தில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகிகள்
கரூரில் வாடகை பாக்கி செலுத்தாத கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்ததால் கடை உரிமையாளர் உடனடியாக ஒருபகுதி நிலுவை தொகையை செலுத்தினார்.
Update: 2024-07-05 07:26 GMT
கரூர் பேருந்து நிலைய வளாகத்தில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை கடந்த ஐந்து ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணம் ரூபாய் 8 லட்சத்தை செலுத்தவில்லை. பலமுறை மாநகராட்சி சார்பாக ஆவின் பாலகத்துக்கு அறிவுறுத்தியும் பணம் கட்டாததால், நேற்று கரூர் மாநகராட்சி வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் தலைமையில் அதிகாரிகள் ஆவின் பாலகத்திற்கு சென்றனர். இந்த சம்பவத்தின் போது, கரூர் மாநகராட்சி கண்காணிப்பாளர் ரகுபதி மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, கடை உரிமையாளர் உடனடியாக ரூபாய் 5 லட்சம் செலுத்தினார். மீதம் செலுத்த வேண்டிய மூன்று லட்சத்தை நாளை செலுத்துவதாக கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு சென்றனர். இதனால் பேருந்து நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.