கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா
திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-01-26 07:37 GMT
அணிவகுப்பு மரியாதை
திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. என்சிசி மாணவர்களின் அணிவகுப்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.ர.சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர். அகிலா முத்துராமலிங்கமும் சுதந்திரத்தின் அடையாளமாக புறாக்களை வானத்தில் பறக்க விட்டனர். தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் மாணவர்களின் பல்வேறு நடனங்கள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றன. கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், டீன்கள், இயக்குநர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.அனைத்து தனிநபர்களின் கூட்டு முயற்சியின் மூலம் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவோம் என்ற செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.