மதுராந்தகத்தில் குடியரசு தின விழா; எம்எல்ஏ பங்கேற்பு
மதுராந்தகத்தில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில், அத்தொகுதி எம்எல்ஏ பங்கேற்றார்.;
Update: 2024-01-26 10:57 GMT
மதுராந்தகத்தில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில், அத்தொகுதி எம்எல்ஏ பங்கேற்றார்.
மதுராந்தகம் சட்டமன்ற அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் இன்று 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுராந்தகம் சட்டமன்ற அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் தலைமையில் அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.அதன் பின்னர் இந்த விழாவில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.