பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஈரோடு, நந்தி மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

Update: 2024-01-26 11:34 GMT

ஈரோடு, நந்தி மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

பள்ளிபாளையம் சாலையில் அமைந்துள்ள நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75-வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி தலைவர் மற்றும் தாளாளர் சி.என்.ராஜா தேசியக்கொடியை ஏற்றி குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார். பள்ளியின் செயலாளர் சி.மோகன் சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் என்.சண்முகசுந்தரி மற்றும் பள்ளியின் துணை முதல்வர் ராஜேஷ் மாணவர்களுக்கு குடியரசு தின விழாவின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து பேசினார். மேலும் இந்த நிகழ்வில் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற பேச்சுப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று ,குடியரசு தின விழா நிறைவு பெற்றது. ஏராளமான மாணவ மாணவியர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News