சேலத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம்

சேலத்தில் நாளை குடியரசு தின விழா கலெக்டர் கார்மேகம் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்

Update: 2024-01-25 01:07 GMT

பைல் படம்


குடியரசு தினவிழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.05 மணிக்கு மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் கார்மேகம் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவிக்கின்றார்.

அதன்பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சுமார் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

Tags:    

Similar News