கோவையில் குடியரசு தினம் கோலாகலம்

கோவையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Update: 2024-01-26 05:11 GMT
கோவை:நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்ட பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 208 அரசுத் துறை பணியாளர்கள் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர்,காவல் கண்காணிப்பாளர் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள்,குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News