அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை

வெள்ளியணை அருகே கல்லுமடையில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2024-01-14 06:43 GMT

கோரிக்கை 

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கல்லுமடை பகுதியில், பட்டா இடத்தில் குடியிருக்கும் பொது மக்களுக்கு, அடிப்படை தேவையான மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் வீட்டு வரி ஆகியவை கிடைக்கப்பெறவில்லை என்று, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி புகார் சென்றுள்ளது. இதன் அடிப்படையில், சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கழகத்தின் தமிழக தலைவர் ஸ்டாலின் தலைமையில், இந்த அமைப்பின் கரூர் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் துணையுடன் சேர்ந்து, சம்பந்தப்பட்ட கல்லுமடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், புகாரில் காணப்பட்ட குறைகள் இருப்பதை உறுதி செய்த அவர்கள், இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவரை சந்தித்து, பொதுமக்கள் தங்கள் அமைப்புக்கு அனுப்பிய புகார் குறித்து விளக்கம் கேட்டனர். மேலும், அங்கு காணப்படும் குறைகளான குடிநீர், மின் இணைப்பு மற்றும் வீட்டு வரி ஆகிய அத்தியாவசிய தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க ஊராட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர்,குறைகளை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
Tags:    

Similar News