இறந்த கூலித்தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க கோரிக்கை

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் இறந்த கூலித்தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-04 08:12 GMT

பைல் படம்

தூத்துக்குடியில் கடந்த 17, 18 ஆம் தேதியில் பெய்த கனமழை காரணமாக தேவர் காலனி பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்து அங்கிருந்த 450 குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் முகாம்களிள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த மழைவெள்ளத்தில் தேவர் காலனி 4வது தெரு பகுதியில்  வசித்து வந்த கூலி தொழிலாளிஆச்சிமுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில் இருந்தார். மழை வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கிய அவரது குடும்பத்தை காவல்துறையினர் மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.

மழைநீரில் விழுந்து கழிவுகள் கலந்த மழை நீரைகுடித்ததால் ஆச்சிமுத்துஉடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகாமிலிருந்து நேற்று வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டை சுற்றி முழங்கால் அளவு கழிவு நீர் கடந்த மழை நீர் இருந்துள்ளது. அந்த தண்ணீரிலேயே தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆச்சிமுத்து வசித்து வந்துள்ளார்.  இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆச்சிமுத்து நேற்று மாலை வலிப்பு வந்து மழை நீரில் பரிதாபமாக பலியானார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பலியான ஆச்சி முத்து குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டுமென அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News