வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு கண்காணிப்பாளரை நியமிக்க கோரிக்கை!

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும் என பாமக வேட்பாளர் பாலு வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-05-31 08:58 GMT

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிகை யில் கலந்து கொள்ளும் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் நடைபெற்றது. இதில் அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பாலு, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் பார்த்திபன், பா.ம.க. நிர்வாகிகள் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ஜானகிராமன், உள்ளிட்ட பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முகவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வக்கீல் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் முறைகேடுகள், ஓட்டுக்கு பணம் கொடுத்தது, தி.மு.க. தேர்தல் விதிமீறல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி, மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தோம். ஆனால் மாவட்ட தேர்தல் அலுவலர் நடுநிலையுடன் செயல்படாமல் புகார் அளித்த பா.ம.க.வினர் மீதே வழக்குப் போட்டு கைது செய்து சிறைக்கு அனுப்பினார். வாக்கு எண்ணிக்கையில் பா.ம.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் கொஞ்சம் வித்தியாசம் தான் வரும் என்பதால் அரக்கோணம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென செயல்படுகின்றனர்.

எனவே வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறாது என்ற காரணத்தால் இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும் என மனு அளிக்க உள்ளோம். இந்த தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினையான குரோமிய கழிவுகளை அகற்ற கோரிக்கை வைத்தனர். அது குறித்து கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அந்த கழிவுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரக்கோணம் தொகுதி மக்கள் பிரச்சினைக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.

Tags:    

Similar News