சிட்கோ தொழிற்பேட்டையை இயக்க முதல்வரிடம் கோரிக்கை

மல்லூரில் 10 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராத சிட்கோ தொழிற்பேட்டையை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தமிழக முதல்வரை ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Update: 2024-07-01 04:56 GMT

முதல்வரிடம் மனு அளித்த ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன்

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தமிழக முதல்வரை ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில் அரியலூர் மாவட்டம் மல்லூரில் 10 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராத சிட்கோ தொழிற்பேட்டையை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்முனைவோர் எதிர்பார்க்கின்றனர். அரியலூர் மாவட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என 2013-ல் சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு சிறு தொழில்வளர்ச்சி நிறுவனம் சார்பில் அரியலூர் வட்டம் மல்லூர் கிராமத்தில் 25.74 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சாலைகள் மற்றும் மின் வசதி ஏற்படுத்தப்பட்டது. 2014-ல் பணிகள் முடிவடைந்த நிலையில், இதுவரை யாரும் இங்கு தொழில் தொடங்கவில்லை. இதற்கு, “சிட்கோ தொழிற்பேட்டை குறித்து போதிய விளம்பரம் செய்யப்படவில்லை. அலுவலகம் அமைத்து அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை, மற்றும் மனைகளின் குத்தகை தொகை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே 10 ஆண்டுகளாக முடங்கியுள்ள சிட்கோ தொழிற்பேட்டையை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தமிழக முதல்வரிடம் மனுவாக அளித்துள்ளார்.

Tags:    

Similar News