விசைப்படகுகள் ஆய்வை கேரளாவிலும் நடத்த கோரிக்கை

கேரள மாநிலம் கொச்சியிலும் விசைப்படகுகளின் ஆய்வை நடத்த வேண்டும்.மீனவர் சங்க ஆலோசகர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தார்.

Update: 2024-06-18 04:30 GMT

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு 

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் சின்னத்துறை மீனவர் சங்கங்களின் ஆலோசகருமான ஜஸ்டின் ஆன்டணி சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:தூத்தூர் மண்டலத்தில் சுமார் 600க்கும் மேற் பட்ட விசைப்படகுகள் உள்ளன. தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் சீர மைப்புப்பணிகள் நடை பெறுவதால் எல்லா விசைப்படகுகளுக்கும் ஆய்வு நடத்த இயலாத நிலை உள்ளது.

எனவே விசைப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வை கொச்சியிலும் வேண்டும்.குமரி மாவட்டம் மேற்கு கடற்கரைக்கு உட்பட்ட மீன்வளம் மீனவர் நலத்துறை குளச்சல் (இருப்பு) தேங்காய் பட்டணம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்ப டாத பல விசைப்படகுகள், அதிலும் குறிப்பாக தூத்தூர் மண்டல மீனவர் களின் விசைப்படகுகள் கொச்சியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் மட்டுமே வருடாந்திர ஆய்வு செய்யப்படுமாயின் இதுமீனவர்களுக்கு வீண் செலவை ஏற்படுத்தும். மேலும், கடற்சீற்றம் காரணமாக படகுகளும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்களின் நலன் கருதி தமிழக அரசு விசைப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வை கொச்சியிலும் நடத்த வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அளித்தார்.

Tags:    

Similar News