சாக்கோட்டையில் வீணாகி வரும் அரசு வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை
சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வீணாகி வரும் அரசு வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது;
By : King 24X7 News (B)
Update: 2024-05-27 12:18 GMT
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்
சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்ட ஜீப்கள் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. சாக்கோட்டை ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் பயன்பாட்டிற்கு அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாடின்றி யூனியன் அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பயன்பாட்டிற்கு தனியார் வாகனம் வாடகை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் வழங்கிடவும், பயன்பாடின்றி வீணாகி வரும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.