மேலூர் அணைக்கரை பகுதி மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை
ஸ்ரீரங்கம் 1 -வது வார்டு மேலூர் அணைக்கரை பகுதி மக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
Update: 2024-03-11 10:45 GMT
திருவரங்கம் 1 -வது வார்டு மேலூர் அணைக்கரை பகுதி மக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருவரங்கம் 1-வது வார்டு மேலூர் மற்றும் அணைக்கரை ஊர் பொதுமக்கள் தலைமுறை தலைமுறையாக சுமார் 150 வருடங்ககளாக வீடுகட்டி குடி இருந்துவருகிறோம். இங்குசுமார் 1000வீடுகள் மற்றும் 1008 குடும்ப அட்டைகள் மற்றும் 2500 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் அரசாங்கத்துக்கு வீட்டு வரி மற்றும் குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின்சார வரி போன்ற அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறோம். மேலூர் 1_வது வார்டு மற்றும் ஏ. பிளாக்.4.5.6.14.15.16.17.18.19. ஆகியவை தோப்பு பிரைவேட்டாக உள்ளது. இதை நகர நத்தம் நிலவரித் திட்டமாக மாற்றி இரயத்துவாரியாக பட்டா வழங்க வேண்டும் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.