ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வுநிலை வழங்க கோரிக்கை

ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வுநிலை வழங்க வேண்டும் என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-06-09 03:52 GMT

மாவட்ட செயற்குழு கூட்டம் 

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீல மேகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் வரவேற்றார். மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றினார்.

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வுநிலை வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இருப்பதுபோல் கவுன்சிலிங் முறையில் வட்டாரத்துக்குள் பணிமாறுதல் வழங்க வேண்டும்.ஊராட்சி செயலாளர்களை பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும், கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களின் காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும், தூய்மைப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர் மகேஸ்வரன், தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர்ச்செல்வன், தலைமை மகளிரணி செயலாளர் கவுசல்யா, மாநில துணைத்தலைவர் கவிச்செல்வன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அனந்தராமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News