நீதிமன்றத்திற்கு நிலம் வழங்க அமைச்சரிடம் கோரிக்கை

மயிலாடுதுறையில் தீயணைப்பு நிலையம் இயங்கிவரும் இடத்தை நீதிமன்றத்திற்கு வழங்க மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை கூட்டமைப்பின் தலைவர் ராம.சேயோன் சென்னையில் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-07-01 03:14 GMT

அமைச்சரிடம் மனு அளித்த ராம.சேயோன்

மயிலாடுதுறையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் சுமார் 15,000 சதுரஅடி இடத்தில்; தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தற்போது மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியன செயல்பட்டு வரும் நிலையில், விரைவில், விரைவு மகளிர் நீதிமன்றம், பி.சி.ஆர். நீதிமன்றம், போக்ஸ்கோ நீதிமன்றம் ஆகியன தொடங்கப்படவுள்ளதால் அதற்கான இடவசதி இல்லாத நிலை உள்ளது

. இந்நிலையில், மயிலாடுதுறையில்; தற்போது இயங்கிவரும் தீயணைப்பு நிலையம் விரைவில் மாவட்ட ஆட்சியரகத்துக்கு பின்னால் இடம் மாற்றப்பட உள்ளதால், அந்த இடத்தை மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அக்கூட்டமைப்பின் தலைவர் ராம.சேயோன் சென்னையில் அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினார்.

Tags:    

Similar News