ஊத்தங்கரையில் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை

ஊத்தங்கரையில் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-02-09 09:38 GMT

கட்டிமுடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2012- 13-ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சுமார் 4.60 லட்சம் மதிப்பீட்டில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஆண்கள் பெண்களுக்கான தனித்தனி அறைகள் கொண்டு அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வராத அவல நிலை காணப்படுகிறது.

இதனால் அலுவலகத்திற்கு 34 பஞ்சாயத்து மற்றும் 186 வருவாய் கிராமத்தை சேர்ந்த போதுமக்கள் தங்கள் தேவையான இருப்பிடச் சான்று, வருவாய் சான்று, வாரிசு சான்று ,ஜாதி சான்று, வாக்காளர் அடையாள அட்டை ,நில அளவை போன்ற அரசின் முக்கிய ஆவணங்களை பெற தினந்தோறும் அரசு வேலை நாட்களில் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த அலுவலகத்தில் பெண்கள்,

குழந்தைகள் ,முதியோர், உடல் ஊனமுற்றோர் இயற்கை உபாதைகளை கழிக்க பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதாக கூறுகின்றன. இது தொடர்பாக பலமுறை உரிய அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே வளாகமானது பழுதாகி குப்பை கூலங்களால் மூடப்பட்டு பயன்படுத்த முடியாத அவல நிலை காணப்படுகிறது.

மேலும் இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதாக புலம்புகின்றன எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வளாகத்தை தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வற வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Tags:    

Similar News